வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டது

வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைமையகம் தற்காலிகமாக மூடப்பட்டது

பத்தரமுல்ல டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக தலைமைக் காரியாலயம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாரதியொருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மறு அறிவித்தல் வரை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பணியக தலைமையகம் மூடப்பட்டிருந்தபோதிலும் அதன் 24 மணிநேர தகவல் சேவை நடைபெறுவதாகவும் 0112880500 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு அதிகாரிகளின் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image