ஆசிரியர் நியமனத்துக்காக காத்திருக்கும் பயிலுனர்களுக்கு நற்செய்தி!

ஆசிரியர் நியமனத்துக்காக காத்திருக்கும் பயிலுனர்களுக்கு நற்செய்தி!

பயிலுனர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவது தொடர்பில் அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளருடன் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க,

பயிலுனர்களுக்கு செப்டம்பர் மாதம் மூன்றாம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்று நாங்கள் தற்போது இரண்டு வார கால போராட்டத்தை அறிவித்துள்ளோம்.

இதையும் வாசியுங்கள் 11 மாதங்களாக கல்வி அமைச்சர் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை

அனைத்து மாவட்ட செயலாளர் களையும் தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். 25 மாவட்ட செயலாளர்களையும் தெளிவுபடுத்தும் நடவடிக்கையை நாளை (இன்று) நாங்கள் முடிவுக்குக் கொண்டுவர இருக்கின்றோம்.

இன்று (நேற்று) நாங்கள், செப்டம்பர் மூன்றாம் திகதிக்கு முன்னர் நிரந்தர நியமனம் வழங்குமாறு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்தோம். அமைச்சிடம் யோசனை ஒன்றையும் சமர்ப்பித்தோம். எனினும் அமைச்சின் தரப்பிலிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை.

அதேபோல் பயிலுனர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவது தொடர்பில் பல்வேறு கருத்தாடல்கள் இடம்பெறுகின்றன. இது குறித்தும் செயலாளரிடமும் பணிப்பாளரிடமும் நாங்கள் வினவினோம். இது குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

கல்வி அமைச்சினால் பாடவிதானங்களுக்கு அமைவான வெற்றிடங்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து அந்த பாடவிதானங்களுக்கு அமைவாக பயிலுனர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரி ஆட்சேர்ப்பு செய்வதாக தெரிவித்தனர் என ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக முனசிங்க தெரிவித்துள்ளார்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image