நாட்டுக்குள் நுழையும் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டுப் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை செய்வதில்லை என்ற தீர்மானமானது எந்தவித விஞ்ஞானரீதியான அடிப்படை எதுவும் அற்ற தீர்மானமாகும் என்று சுகாதார தொழில்வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
All Stories
அதிகாலை 4 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ள நிலையில், சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல் கோவை வருமாறு...
நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் அரச மற்றும் தனியார் ஊழியர்கள் பணிக்கு சமூகமளிப்பது குறித்து தீர்மானம் எட்டப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
தங்களது பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்கப்படாவிடின் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என கிராம உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க ஒன்றியம் எச்சரித்துள்ளது.
நாடு மீண்டும் திறக்கப்படும் போது அரசாங்க ஊழியர்களை சேவைக்கு அழைப்பது தொடர்பிலான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று (29) நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு என்று கூறிய தோட்டக் கம்பனிகள் தற்போது தம்மை ஏமாற்றியுள்ளதாக கூறி மஸ்கெலியா நல்லத்தண்ணீர் பொலிஸ் பிரிவுக்குட்பட்டு மரே தோட்டத்தின் 7 பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று (27) தோட்ட, தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒக்டோபர் முதலாம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும், ரயில் சேவைகள் எதிர்வரும் 2 வாரங்களுக்கு முன்னெடுக்கப்படமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
16 முதல் 18 வரையான சிறுவர்களை ஈடுபடுத்தக் கூடாத ஆபத்தான தொழில்கள் பட்டியலை 71 வரைக்கும் அதிகரிப்பதற்கான கட்டளைகளை நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.
தற்போது நாட்டில் உள்ள அசேதன பசளை இறக்குமதி தடையானது, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களினது வருமானத்திற்கு நேரடியாக தாக்கம் செலுத்தும் என்று முதலாளிமார் சம்மேளத்தின் ஊடகப் பேச்சாளரும் ஹேலிஸ் பெருந்தோட்ட யாக்கத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் முதலாம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதுடன், அத்தியாவசிய அரச சேவைகளுக்கு முன்னுரிமையளித்து, பொது சேவைகளை வழமைபோன்று செயற்படுத்த எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நெல் தவிர்ந்த ஏனைய பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அவசியமான சேதனப் பசளையை இறக்குமதி செய்து வழங்க அரசாங்கத்துக்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தலை முறியடிக்க கடற்படையினர் மேற்கொண்ட முயற்சிகள் அவுஸ்திரேலிய தூதுக்குழுவினரால் பாராட்டப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.