சேவையின் போது தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்குக

சேவையின் போது தொற்றுக்குள்ளாகி இறந்தவர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்குக

அரச சேவையில் பணியாற்றி வந்த நிலையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் அனைத்து அரச ஊழியர்களுக்கு

அவர்களுடைய சேவைக் காலம் முடியும் வரை சம்பளம் வழங்க ஆவனை செய்யுமாறு அபிவிருத்தி அதிகாரிகள் சேவை சங்கம் பொது சேவை, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் நாடு பூராவும் கொவிட் பரவி வரும் நிலையில் புதிய திரிபுகள் காரணமாக நிலைமை மோசமாகியுள்ளது. கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதுதான் எம் அனைவரினதும் நோக்கமாக இருப்பினும் அதனை நாம் சாத்தியப்படுத்திக்கொள்ள தவறியுள்ளோம். இத்தொற்றுக்கு பொதுசேவை, மாகாணசேவை என்பவற்றில் உள்ள பல அரச ஊழியர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அபிவிருத்தி அதிகாரிகள், பயிலுநர் பட்டதாரிகள், கிராமசேவகர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், பொலிஸார் உட்பட பாதுகாப்புத்துறை ஊழியர்கள் போன்ற பலர் சேவையில் இருக்கும் போது தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

 

மேலும், பொலிஸ் திணைக்களத்தின் கீழ் சேவையாற்றிய நிலையில் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களுக்கு அவர்களுடைய சேவைக்காலம் முழுவதும் அவர்களுடைய சம்பளத்தை வழங்க விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தெரிந்துக்கொள்ள முடிந்தது. அரசாங்கம் என்றவகையிலும், விடயப்பொறுப்பு அமைச்சர் என்றவகையிலும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுமாயின் நாம் அதனை பாராட்டுகிறோம். இத்தகைய அபாயகரமான சூழலில் முன்னின்று பணியாற்றுவோருக்கு இந்நடவடிக்கை ஒரு பலமாக அமையும்.

பணியில் இருந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரை 5 பயிலுநர் பட்டதாரிகள் இதுவரை உயிரிழந்துள்ளனர். வேறு ஊழியர்களும் உயிரிழந்துள்னளர். பொதுசேவைகள், மாகாண பொது சேவை என்பவற்றில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பயிலுநர் பட்டதாரிகள், கிராம சேவகர்கள், பொது முகாமைத்துவ அதிகாரகிள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட என பொதுச்சேவையில் இருக்கும் போது கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இறந்த அனைத்து பொதுச்சேவை ஊழியர்களுக்கும் சேவைக்காலம் முடிந்து ஓய்வு பெறும் வரையில் குறிப்பிட்ட சம்பளத்தை வழங்குமாறு விடயப் பொறுப்பு அமைச்சர் என்றவகையில் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு கோருகிறோம் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

d

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image