பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கக்கோரி நியமனத்துக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவிடம், அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தினால் மகஜர் ஒன்று நேற்று (21) கொழும்பில் வைத்து வழங்கப்பட்டது.
All Stories
சுகாதார பரிசோதர்களுக்கு வழங்கப்படுவது போன்று கிராமசேவகர்களுக்கும் மேலதிக கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு கல்வி பொதுத் தாரதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப பத்திரங்களை மாத்திரம் அனுப்பி வைப்பதற்கு அதிபர் சங்கம் தீர்மானித்துள்ளது.
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, ஒன்றிணைந்த சுகாதார சேவை ஊழியர்கள் சங்கம், நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னால் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
கிராமிய மட்டத்திலான தொழில் வாய்ப்புகளை உருவாக்கல், அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை மாவட்ட செயலாளர்களிடம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர், இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.
பொதுநவாய பொதுச் செயலாளர் பட்ரிசியா ஸ்கொட்லேன்ட்டுடன் நியூயோர்க்கில் இடம்பெற்ற மெய்நிகர் சந்திப்பொன்றில், பொதுநவாய நாடுகளுடனான பேச்சுவார்த்தை மற்றும் ஈடுபாட்டிற்கான இலங்கையின் செயலுறுதிப்பாட்டை இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
!பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுப்பதற்கான தேசிய திட்டமொன்றை வகுக்குமாறு கோரி அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் வழங்கும் வகையில் நிகழ்நிலை போராட்டமொன்று நேற்று (19) 5.00 மணிக்கு ஆரம்பமானது.
ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் மத்திய நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வருடாந்தம் பெற்றுக்கொடுப்பதற்கு முறைசார்ந்த திட்டமொன்று இல்லாமையினால் பல பட்டதாரிகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. பட்டதாரிகள் வருடாந்தம் எதிர்நோக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலேயே இந்நிகழ்நிலை போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
BUDGET BUCKET ஆகும் நாட்டில் பட்டதாரி BITE ஆகுவாரா என்ற தொனிப்பொருளில் இந்நிகழ்நிலை போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வேலையற்ற பட்டதாரிகளின் முகப்புத்தக பக்கத்தினூடாக நேரடியாக இணையும் வாய்ப்பு பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
ஜப்பான் நாளை திங்கட்கிழமை முதல் இலங்கை உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளின் உள் நுழைவுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக ஜப்பான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான இயலுமை குறித்து பரிசீலனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் - அதிபர்களுக்கான 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜக்ஷவுடன் சம்பள முரண்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அதிபர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக கல்வியமைச்சின் செயலாளர் கலாநிதி கபில பெரேரா தெரிவித்துள்ளார்.