மாணவர்களுக்கான கற்பித்தலை தொடர்ந்து மேற்கொள்ள அமைச்சரவையின் புதிய தீர்மானம்

மாணவர்களுக்கான கற்பித்தலை தொடர்ந்து மேற்கொள்ள அமைச்சரவையின் புதிய தீர்மானம்

கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையில் கல்வித் துறையில் கற்றல் கற்பித்தல் செயன்முறையை தொடர்ந்து மேற்கொள்வதற்கான தீர்மானம் ஒன்றை அமைச்சரவை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு

கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையில் கல்வித் துறையில் கற்றல் கற்பித்தல் செயன்முறையை தொடர்ந்து மேற்கொள்வதற்காக 'நெணச' கல்வி தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்

கல்வி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலமான இரண்டு அலைவரிசைகள் மூலம் டயலொக் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு தொடக்கம் செய்மதி தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி 'நெணச' எனும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியது. குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் டயலொக் நிறுவனத்தால் கிட்டத்தட்ட 2,200 பாடசாலைகளுக்கு தொலைக்காட்சிகள் மற்றும் டயலொக் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த இணைப்புக்களுக்கான மாதாந்தக் கட்டணமின்றி இலவசமாக வழங்கப்பட்டது. கொவிட் - 19 பெருந்தொற்றுக் காரணமாக கல்வித் துறையில் கற்றல் கற்பித்தல் செயன்முறையை தொடர்ந்து மேற்கொள்வதற்காக 'நெணச' கருத்திட்டத்தில் புதிய இரண்டு அலைவரிசைகள் உள்ளடங்கலாக 04 அலைவரிகள் மூலம் 2021 செப்டெம்பர் மாதம் 07 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கும், 2022 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி தொடக்கம் மொத்த அலைவரிசைகளின் எண்ணிக்கையை 10 ஆக அதிகரிப்பதற்கும், டயலொக் நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image