துறைமுகத்திற்கு சொந்தமான நிலத்தை விற்க முயற்சி- எதிர்க்கும் தொழிற்சங்கங்கள்

துறைமுகத்திற்கு சொந்தமான நிலத்தை விற்க முயற்சி- எதிர்க்கும் தொழிற்சங்கங்கள்

துறைமுகத்துக்கு சொந்தமான நிலத்தை சீனாவுக்கு விற்க அரசாங்கம் முயல்வதாக துறைமுகத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தொழிற்ங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே இவ்விடயம் கூறப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் சுனில் டி சில்வா, கடந்த காலங்களில் எடுத்த தீர்மானங்கள் தற்போது மாற்றப்படுகின்றன. 80களில் துறைமுகத்திற்குள் கொள்கலன்களை அனுமதிக்கும் வகையில் ஒரு புதிய சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் பொருட்களின் ஏற்றுமதி தொடங்கியது, அதன் போது துறைமுகத்திற்கு போதிய இடவசிகள் காணப்படாமையினால் வேறிடத்திற்கு மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று தெரிவித்துளளார்.

ஏற்கனவே துறைமுக நகரத்தின் தளவாடங்கள் மற்றும் கொள்கலன் நிறுத்தல் போன்றவற்றுக்கு இடப்பற்றாக்குறை நிலவுகிறது. இந்நிலையில் நிலம் விற்கப்படுமானால் என்ன செய்வது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மின்சாரசபை கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் 5 வருடங்கள் மாத்திரமே ஆட்சியில் இருக்கும். இத்தகைய கடுமையான தீர்மானங்கள் வாழ்நாள் முழுவதையும் பாதிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இலங்கை மின்சாரசபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்களின் குரலை நசுக்க அரசாங்கத்தினால் முடியாது, உயிரை மாத்திரமே எடுக்க முடியும் எ்னறும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image