கொவிட் 19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் அடுத்த வாரம் போடப்படடவுள்ள நிலையில் கற்றல் நடவடிக்கைகளில் அதிபர் ஆசிரியர்கள் ஆரம்பிக்க வேண்டும் என்று கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
டெயிலி மிரர் இணைதளத்திற்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டின் கீழ் அதிபர் ஆசிரியர்களுக்கு அடுத்த வாரமளவில் இரண்டாம் தடுப்பூசியும் வழங்கப்படும். உடனடியாக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான தீர்மானங்கள் எதுவும் இல்லை. சுகாதார அமைச்சின் தீர்மானத்திற்கமையவே அத்தீர்மானம் எட்டப்படும்.
பாடசாலை ஆரம்பிக்கப்படுமாக இருந்தால் முதலில் எந்தெந்த தரங்களை ஆரம்பிப்பது என்பது தொடர்பில் தற்போது சுகாதார அமைச்சுடன் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் நாட்டில் தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில் ஒரு முடிவைப் பெறுவது கடினம்" என்று அமைச்சர் கூறினார்.
எவ்வாறு இருப்பினும் பாடசாலைகளை ஆரம்பிக்க முதல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பாடசாலை ஊழியர்களின் நன்மைக்கருதி துப்புறவு பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
இரண்டாம் தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் பின்னர் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கமைய அதிபர் ஆசிரியர்கள் பாடசாலை கற்பித்தல் நடவடிக்கைளில் ஈடுபட முடியும். எனினும் அதிபர் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக நிகழ்நிலை கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட முடியும். சுகாதார பரிந்துரைகளுக்கமைய, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முதல் நிறைய விடயங்கள் செயற்படுத்த வேண்டும் என்றும் கல்விமைச்சர் தெரிவித்துள்ளார்.