2023ஆம் ஆண்டில் அரச உத்தியோகத்தர்களுக்கு 4,000 ரூபாவுக்கும் மேற்படாத விசேட முற்பணம் வழங்கப்பட உள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
All Stories
நாளை 30 ஆயிரத்துக்கும் அதிகமான அரச பணியாளர்கள் ஓய்வு பெறவுள்ள நிலையில், ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பொது நிர்வாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினம் 30 ஆயிரத்துக்கும் அதிகமான அரச பணியாளர்கள் ஓய்வுபெறவுள்ளனர்.
மின் கட்டணம் 60 முதல் 65 வீதத்திற்குள் திருத்தப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் சுமார் 1,100 ஊழியர்கள் 2023ஆம் ஆண்டு ஓய்வுபெற உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நுகர்வோரின் மின் இணைப்பைத் துண்டிக்குமாறு இலங்கை மின்சார சபையின் அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில்லை என தொழிற்சங்கங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.
அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இணைய (Online) வழியில் மாத்திரமே ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான (ETF) பங்களிப்புகளை தொழில்தருநர்கள் செலுத்த வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரச துறை ஊழியர்களுக்கு சம்பளமின்றி ஐந்தாண்டு விடுமுறை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 25,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 31ஆம் திகதி முதல் 49 மொபைல் போன் மொடல்களுக்கு வட்ஸ்அப் மென்பொருள் தனது சேவையை வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வருடத்தின் இறுதியில் சுமார் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் இலங்கையர்களினால் நிரப்பப்படும், வருகைதரல் மற்றும் வெளியேறுதல் அட்டையை (Arrival and Departure Card) இணைய வழியில் (Online) நிரப்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் நிறைவேற்று சேவை பிரிவில் முதல் தர பதவிகளுக்கான அதிகாரிகளைத் தெரிவு செய்வது தொடர்பாக பொதுச் சேவை ஆணைக்குழு கடந்த செப்டம்பர் 15ஆம் திகதி வெளியிட்ட சுற்றறிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நிறைவேற்று தர அதிகாரிகள் நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்கத்தின் மாதாந்த வருமானம் ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை வழங்குவதற்கு போதாது என நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன நேற்று தெரிவித்தார்.