30 ஆயிரத்துக்கும் அதிகமான அரச பணியாளர்கள் ஓய்வு

30 ஆயிரத்துக்கும் அதிகமான அரச பணியாளர்கள் ஓய்வு

நாளை மறுதினம் 30 ஆயிரத்துக்கும் அதிகமான அரச பணியாளர்கள் ஓய்வுபெறவுள்ளனர்.

அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுபவர்களின் வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டது.

எனினும், 2023ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்பட்டது.

இதற்கமைய, அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் கட்டாய வயதெல்லையை 60 ஆக அறிவித்து டிசம்பர் 5ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

2023 ஜனவரி 01 முதல் இந்தத் தீர்மானம் அமுலுக்கு வருவதாக, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எனும் வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

2309/04 எனும் டிசம்பர் 05ஆம் திகதியிடப்பட்டட குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காலத்திற்குக் காலம் திருத்தப்பட்டவாறான, ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் 17 ஆம் பிரிவை முழுமையாக நீக்கி பின்வரும் பிரிவைப் பதிலீடு செய்வதன் மூலம் ஓய்வூதிய பிரமாணக் குறிப்பு மேலும் திருத்தப்படுகின்றது.

17. ''ஐம்பத்து ஐந்து வயது பூர்த்தியடைகின்ற போது அல்லது அதன் பின்னர் அரசாங்கத்தின் எந்தவொரு ஊழியரையும் அரசாஙக சேவையிலிருந்து ஓய்வுபெறுவதற்கு பணிக்க முடியும். தகுதிவாய்ந்த அதிகாரியொருவரினால சேவையில் வைத்திருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டாலன்றி அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் அல்லது வேறு ஏதேனும் ஒரு சட்டத்தின் மூலம் கட்டாயம் ஓய்வு பெறச் செயயப்படும் காலம் குறிப்பாகத் தீர்மானிககப்பட்டுள்ள உத்தியோகததர்கள் தவிர, அனைதது சிவில் அரசாங்க உத்தியோகத்தர்களும் அறுபது வயது பூர்த்தியடையும் போது கட்டாயம் சேவையிலிருந்து ஓய்வுபெறுதல் வேண்டும்.'

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image