மக்கள் நட்பு தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ள மின்சாரசபை ஊழியர்கள்!

மக்கள் நட்பு தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ள மின்சாரசபை ஊழியர்கள்!

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நுகர்வோரின் மின் இணைப்பைத் துண்டிக்குமாறு இலங்கை மின்சார சபையின் அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்துவதில்லை என தொழிற்சங்கங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.

நேற்று (28) காலையுடன் பேசிய CEB கூட்டு தொழிற்சங்க கூட்டணியின் (CEBJTUA) ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால், CEBJTUA ஒவ்வொரு மாதமும் வீடுகளுக்கு மின் கட்டணப் பட்டியல் விநியோகித்தல் சேவை முன்னெடுக்கப்படும். எனினும் இலங்கை மின்சாரசபையின் அறிவுறுத்தல்களுக்கமைய, மின் கட்டணம் செலுத்த முடியாது போன பயனாளர்களுடைய வீடுகளுக்கு மின் இணைப்பை துண்டிக்கப்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

“அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை எடுத்து மக்களை மேலும் ஒடுக்குவதற்கு நாங்கள் தயாராக இல்லை. மக்களுக்கு நிவாரணம் கிடைக்காத நிலையில், இ.போ.ச உட்பட அரச ஊழியர்களை அரசாங்கம் ஒடுக்குகிறது. எனவே மக்களை மேலும் ஒடுக்கக் கூடாது.

எனவே மக்களை மேலும் ஒடுக்கக் கூடாது. நாங்கள் அவ்வாறு செய்ய வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது, ஆனால் நாங்கள் மக்கள் நட்புடன் தொழிற்சங்க போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளோம். இதுபோன்ற போராட்டத்தை நடத்துவது, அரசின் இத்தகைய முடிவுகளுக்கு எதிராக மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு உதவியாக இருக்கும்” என்று ஜெயலால் கூறினார்.

 தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்பவர்கள் உத்தேச கட்டண உயர்வின் பின்னரும் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்துவார்கள், எனினும் பெரும்பான்மையான மக்களால் தமது கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் கூறினார்.

“தற்போது மக்கள் பல பிரச்சினைகளால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் 2023 ஜனவரி மற்றும் மே மாதங்களில் இரண்டு தடவைகள் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.சமீபத்தில் ஒரு லீற்றர் எரிபொருளின் விலை சுமார் 400 ரூபாவாக அதிகரித்தது.. அரசாங்கம் திட்டமிடும் விதத்தின் அடிப்படையில், ஒரு மின் அலகு விலையும் எதிர்காலத்தில் அந்தளவுக்கு அதிகரிக்கும் என்பது எமக்கு தௌிவாக தெரிகிறது.

இவ்வாண்டு ஓகஸ்ட் மாத சுங்க வரி அதிகரிப்பினால் ஏற்பட்ட பற்றாக்குறையான 227 பில்லியன் ரூபாவை உத்தேச கட்டண அதிகரிப்பினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேக்கர தெரிவித்துள்ளார்.

எவ்வாறு இருப்பினும் உத்தேச மின் கட்டண அறிவிப்பிற்கு தொழிற்சங்கங்கள், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள், வர்த்தக சமூகம் மற்றும் பிற சிவில் சமூக அமைப்புகள் போன்ற பல தரப்பினரின் எதிர்ப்பு வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image