பாடசாலைகளின் புதிய கல்வியாண்டு ஆரம்ப காலம் அறிவிப்பு

பாடசாலைகளின் புதிய கல்வியாண்டு ஆரம்ப காலம் அறிவிப்பு

2023 ஆம் ஆண்டின் பாடசாலைகளுக்கான கல்வியாண்டு அடுத்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளின் ஆரம்ப வகுப்புகளுக்கான பருவ பரீட்சைகளை நடத்துவதில்லை என கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கு பதிலாக, மாணவர்கள் தங்கள் படைப்பு திறன்களை மதிப்பிடுவதற்கு உடற்பயிற்சி சார்ந்த செயல்பாடுகளை எதிர்கொள்ளவுள்ளனர்.

க.பொ.த (சா/த) பரீட்சைக்குப் பின்னர் மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கேற்ப அரச தொழில்நுட்பக் கல்லூரிகளிலோ அல்லது அரச பல்கலைக்கழக கல்வியிலோ தொழில் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழிற்பயிற்சி நெறிகளிலோ சேர ஊக்குவிக்கப்படுவார்கள் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார் .

அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் மாணவர்களின் தாமதமான அல்லது தவறவிட்ட கல்விச் செயல்பாடுகளை முன்னெடுக்க குறைவான விடுமுறைகளும் அதிக கல்விப் பணிகளும் வழங்கப்படும்.

அடுத்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள 7,900 பின்தங்கிய பகுதி பாடசாலைகளைச் சேர்ந்த ஒரு மில்லியன் மாணவர்களுக்கு இலவச சீருடைப் பொருட்கள், இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் இலவச மதிய உணவும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம் - தினகரன்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image