சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காது சுமார் 200 வைத்தியர்கள் வௌிநாட்டுக்கு

சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காது சுமார் 200 வைத்தியர்கள் வௌிநாட்டுக்கு

கடந்த இரண்டு வருடங்களில் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காது 150 முதல் 200 இற்கு இடைப்பட்ட வைத்தியர்கள் சேவையை விட்டு விலகி வெளிநாடு சென்றுள்ளனர்.

இதன்காரணமாக நாட்டின் சில பிரதேசங்களில் உரிய சுகாதார சேவைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களில், சுகாதாரத்துறைக்கு அறிவிக்காது வைத்தியர்கள் வெளிநாடு செல்கின்ற நிலை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலவசக் கல்வியின்கீழ் வைத்தியர் ஒருவரை உருவாக்குவதற்காக அரசாங்கம் வருடமொன்றுக்கு பெருந்தொகையான நிதியை செலவிடுகின்றது.

அத்துடன் கட்டாய வெளிநாட்டு பயிற்சிக்காக பெரும்பலான வைத்தியர்கள் லண்டன், அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்கின்றனர்.

அவர்களுக்கான வெளிநாட்டு பயணசீட்டு உள்ளிட்ட சகல கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image