இவ்வாண்டு (2022) ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள கொரிய மொழித் தேர்வுப் பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்கப்படவுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி தொடக்கம் 11ம் திகதி வரை பரீட்சை அனுமதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது.
பரீட்சை அனுமதி அட்டை வழங்குவது தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளமான www.slbfe.lk இணையதளத்திற்குள் பிரவேசித்து அறிந்துகொள்ள முடியும்.