சிங்கப்பூரில் சர்வதேச பயணிகளுக்காக பயண வழிகாட்டி அறிமுகம்

சிங்கப்பூரில் சர்வதேச பயணிகளுக்காக பயண வழிகாட்டி அறிமுகம்

சிங்கப்பூர் சுற்றுலா ஆணையம் (STB) ஐந்து சுற்றுலாத் துறை அமைப்புகளுடன் ஒன்று சேர்ந்து, பாதுகாப்பான பயண வழிகாட்டி மற்றும் ‘Experience Singapore!’ என்ற தொகுப்பை அறிமுகப்படுத்தி, சர்வதேசப் பயணிகளை வரவேற்க தயாராகிறது.

இந்த பாதுகாப்பான பயண வழிகாட்டியானது, சுற்றுலா வர்த்தகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை நன்கு புரிந்துகொள்ள உதவும் உத்திகளை வழங்குகிறது.

இதனால் பயணிகளின் சுயவிவரங்களின் அடிப்படையில் பயணத் திட்டங்களைத் தனிப்பட்ட முறையில் அவர்கள் உருவாக்க முடியும்.

 

“COVID-19 சூழலுடன் வாழ்வதை நோக்கி நகர்வதால், எந்த வித ஆபத்தும் இன்றி அதிகமான வருகையாளர்களுக்கு மீண்டும் எல்லைகளை திறக்க வேண்டியிருக்கும்.”

அப்போது ​​சிங்கப்பூரை பாதுகாப்பான பயண இடமாக நிலைநிறுத்த தேவையான நடைமுறைகளையும் நடவடிக்கைகளையும் சுற்றுலாத் துறை பின்பற்றுவது இன்றியமையாதது என்று STB பிராந்திய இயக்குநர் (இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா) ஜிபி ஸ்ரீதர் கூறினார்.

மூலம் - தமிழ் மைக்செட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image