ருமேனிய எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற 9 இலங்கையர் கைது!

 ருமேனிய எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற 9 இலங்கையர் கைது!

காரில் மறைந்திருந்து நாட்டின் எல்லையை கடக்க முற்பட்ட இரு இலங்கை குழுவினரை கைது செய்துள்ளதாக ரொமேனியா எல்லைப் பாதுகாப்புப் படையினர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

செனாட் எல்லை கடவைப் பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை (04) ருமேனிய பிரஜையொருவர் ஓட்டிச் சென்ற காரில் மறைந்திருந்தபோதே இவ்விலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் எல்லையை கடந்த செல்ல 27 வயது ருமேனிய பிரஜை 21 வயதான மற்றொரு ருமேனிய பிரஜையுடன் நாட்டின் எல்லையை கடக்க முட்பட்ட போது பொலிஸார் வேகத்தை கட்டுப்படுத்த முயன்ற போது காரின் முன்னிருக்கைக்கும் பின்னிருக்கைக்கும் இடையில் ஒரு பெண் மறைந்திருந்ததை கண்டுள்ளளனர். அதேநேரம் காரின் பின்பகுதியில் மேலும் 4 வெளிநாட்டு ஆண்கள் மறைந்திருந்தமையும் கண்டு பிடிக்கப்பட்டது.

விசாரணைகளில் 26 முதல் 53 வயதுடைய குறித்த இலங்கையர், ருமேனியாவில் வசிப்பதறகாக ஆவணங்களை வாகனத்தில் மறைந்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) ருமேனியாவின் மற்றொரு எல்லைப் பகுதியை சட்டவிரோதமாக கடக்க முற்பட்ட ருமேனியாவில் தங்குவதற்கான அனுமதியுடன் மேலும் 4 இலங்கையர்களை கைது செய்துள்ளனர்.

உரிய செனகன் வீசா இல்லாத குறித்த இலங்கையர்கள் மேற்கு ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக குடிபெயர முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image