பெலாரஸில் கற்கும் மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

பெலாரஸில் கற்கும் மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

பெலாரஸில் உயர்கல்வியை தொடரும் அனைத்து இலங்கை மாணவர்களையும் மொஸ்கோ வழியாக இலங்கை அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மொஸ்கோ வழியாக பயணிப்பதற்கான உடனடி சுற்றுலா வீசா வழங்குவதற்கான ஏற்பாடும் முன்னெடுக்கபட்டுள்ளதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தூதரகம் குறித்த மாணவர்கள் கற்கும் கல்லூரிகளின் நிருவாகம் மற்றும் பெற்றோருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலையடுத்து இத்தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமான நாட்டுக்கு வர எதிர்பார்த்துள்ள இலங்கை மாணவர்களை மொஸ்கோவூடாக நாடு திரும்புமாறு வௌிவிவகார அமைச்சு கோரியுள்ளது.

பெலாரஸில் சுமார் 1,561 இலங்கை மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என்றும் வௌிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image