சம்பந்தப்பட்ட தரப்பினருடன் எவ்வித கலந்துரையாடலையும் மேற்கொள்ளாமல் இலங்கை அரசாங்கம் நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு மேற்கொள்ளும் முயற்சி தொடர்பில் தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆசிய இணையத்தள கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
All Stories
கடந்த சில நாட்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பயணங்கள் தாமதமாகியதன் காரணமாக சுமார் 6 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக விமான ஊழியர்களுக்கு தற்சமயம் கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது எனவும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வங்கித் துறையில் பணியாற்றிய சுமார் 10,000 ஊழியர்கள் பணி விலகியுள்ளனர். அவர்களில் ஒரு தொகையினர் புலம்பெயர்ந்துள்ளனர் என்கிறார் ஹட்டன் நேஷனல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ்
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்ய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மேற்கொண்ட தீர்மானத்தை சட்டப்பிரிவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலமானது கருத்து வெளியிடுதல், தகவல் அறியும் சுதந்திரங்கள் மீதான தாக்குதல் என சர்வதேச சட்டவல்லுநர்கள் சங்கம் (International Commission of Jurists) தெரிவித்துள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் எழுதப்பட்ட “The Right Eye” எனும் புலனாய்வு நூல் வெளியீட்டு விழா கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
நாட்டிற்குள் இனவாத மோதல்களை ஏற்படுத்தி தங்களது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ள சில அரசியல் குழுக்கள் முயற்சித்து வருவதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் சாதகமான முறையில் இடம்பெற்று வருவதா பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலங்களை வன்மையாகக் கண்டிப்பதாக சட்டத்தரணிகள் ஒன்றிணைவு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
இணையம் ஊடாக இடம்பெறும் மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
கணக்காய்வு சட்டத்தின் புதிய விதிகளின் படி, ஊழல் மோசடியில் ஈடுபட்ட அரச அதிகாரிகளிடம் இருந்து கூடுதலான கட்டணத்தை வசூலிக்கத் தொடங்கியுள்ளதாக தேசிய கணக்காய்வாளர் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2023ற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.