விமான ஊழியர்களுக்கு கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது - அமைச்சர்

விமான ஊழியர்களுக்கு கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது - அமைச்சர்

கடந்த சில நாட்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பயணங்கள் தாமதமாகியதன் காரணமாக சுமார் 6 மில்லியன் அமெரிக்க டொலர் நாட்டம்  ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக விமான ஊழியர்களுக்கு தற்சமயம் கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது எனவும்  துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான பயணங்கள் கடந்த சில நாட்களில்  குறித்த நேரத்தில் பயணிக்க தவறியமை குறித்தும் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்தும் விமானத்துறை  அமைச்சர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இயங்கும் 21 விமானங்களை இயக்குவதற்கு சுமார் 260 விமானிகள் காணப்படுகின்றனர். அதன்படி, ஒரு விமானத்திற்கு 12 விமானிகள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர். இது சர்வதேச தரத்திற்கு ஏற்பவே காணப்படுகின்றது.

சர்வதேச சட்டங்களுக்கமைய, ஒரு விமானி மாதத்திற்கு 100 மணிநேரம் விமானத்தை செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எமக்கு கிடைத்த அறிக்கைகளின்படி, கடந்த காலங்களில் நாட்டின் விமானி ஒருவர் மாதத்திற்கு சுமார் 60 மணிநேரம் மாத்திரமே விமானத்தை செலுத்தியுள்ளார். ஒரு விமானி மாதத்திற்கு குறைந்தது 80 மணிநேரம் பறந்திருந்தால், இத்தகைய சிக்கல் ஏற்பட்டிருக்காது.

உயர்தர விமான சேவையை வழங்குவதில் எமக்கு பெரும் பொறுப்பு உள்ளது, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில்  வேறு விமான நிறுவனங்களுக்கு இந்த விமானங்களை இயக்குவதற்கான உரிமையை வழங்க தீர்மானித்துள்ளேன் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சில்வா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளே இந்த காலதாமதத்திற்கு காரணம் என பொறியாளர்கள் சங்க பிரதிநிதிகள் இதன்போது குறிப்பிட்டுள்ள போதும் ஒருவித தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி - வீரகேசரி

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image