ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக 06 அரச நிறுவனங்கள் எதிர்வரும் நாட்களில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு என அழைக்கப்படும் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளன.
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தற்போது கிடைக்கும் 9% நலன் அதன் உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், சர்வதேச அளவுகோல்களின்படி தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமுலம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
மின்சாரம், பெற்றோலியம் மற்றும் சுகாதார சேவைகள் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் அழைப்பையேற்று, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ட்ரூ ப்ரான்ஸ், மலையகத்துக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ரயில்வே இயந்திர சாரதிகள் கடந்த 11ஆம் திகதி முதல் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு நேற்று (13) மாலை கைவிடப்பட்டது.
கடமை நேரத்தில் வைத்தியசாலை வளாகத்திற்குள் திறன்பேசிகளை (Smartphone) பாவிப்பதை மட்டுப்படுத்துமாறு வட மாகாண சுகாதார சேவை பணிப்பாளரால் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு விசேட அறிவிறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மலையக மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் வாழ்வதற்கு ஏற்ற வகையில் குடியேற்றத்தை ஏற்படுத்த பலமான திட்டத்தை வகுக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் அடையாளம் மட்டுமல்ல மலையக சமூகமே பேரழிவையே சந்திக்கும் என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் உழைக்கும் போது செலுத்தும் வரியில் (PAYE tax) திருத்தங்களை மேற்கொள்ளும் விடயத்தில் தலையிடவுள்ளதாக 'பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு' தெரிவித்துள்ளது.
மலையகம் பற்றி குறிப்பிடாமையை ஒரு குறைபாடாக ஐநாவின் இலங்கை பிரதிநிதி மார்க்-அந்தரே ஏற்றுக்கொண்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட புதிய பொருளாதார மறுசீரமைப்புகளில் இதுவரை அமுல்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான முதலாவது முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் நேற்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ரயில்வே சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.