உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்ய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மேற்கொண்ட தீர்மானத்தை சட்டப்பிரிவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
All Stories
நாட்டிற்குள் இனவாத மோதல்களை ஏற்படுத்தி தங்களது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ள சில அரசியல் குழுக்கள் முயற்சித்து வருவதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க தொடர்பாடல் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
அரசாங்க ஊழியர்களுக்கான 2024ஆம் ஆண்டில் சம்பள முற்பணம், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்துவதற்கான திகதிகளை அறிவிக்கும் சுற்றறிக்கையை நிதி அமைச்சின் சம்பள நடவடிக்கைப் பிரிவு வெளியிட்டுள்ளது.
இணையம் ஊடாக இடம்பெறும் மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவிற்கும் (Kristalina Georgieva) இடையிலான சந்திப்பு நியூயோர்க்கில் உள்ள ஐ. நா சபையின் தலைமையகத்தில் நேற்று (20) இடம்பெற்றது.
பல்வேறு புதிய சீர்திருத்தங்களுடன் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவி முன்னெடுத்து வரும் வலுவான வேலைத்திட்டத்தின் காரணமாக, கடந்த ஒரு வருடத்தில் நாட்டில் பணவீக்கம் 62.1% சதவீதத்தினால் குறைந்துள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் புத்திஜீவிகள் வெளியேறுவதை தடுப்பதிலும், அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதிலும், தரமான மருந்துகள் அரச வைத்தியசாலைகளில் இருப்பதை உறுதிப்படுத்துவதிலும் அரசாங்கத்தின் மெத்தன போக்கை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் 12 மணி முதல் 1 மணி வரையில் போராட்டம் நடைபெற்றது.
நன்றி - வீரகேசரி
சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றைய (22) நாளை தேசிய எதிர்ப்பு நாளாக அறிவித்துள்ளன.
பைடன் – ஹாரிஸ் நிர்வாகத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை ஆதரிப்பதற்காக வர்த்தக பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அமெரிக்கா, இலங்கைக்கு உறுதியளித்துள்ளது.