GSP பிளஸ், ஐரோப்பா - வட அமெரிக்க பிராந்திய வர்த்தக்கத் தொடர்புகள் குறித்து கவனம்

GSP பிளஸ், ஐரோப்பா - வட அமெரிக்க பிராந்திய வர்த்தக்கத் தொடர்புகள் குறித்து கவனம்
GSP பிளஸ், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க பிராந்தியங்களுடனான வர்த்தக்கத் தொடர்புகளை பற்றி சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
 
GSP பிளஸ், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க பிராந்தியங்களுடனான வர்த்தகத் தொடர்புகள் பற்றி முன்வைத்த இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள் இந்த விடயங்கள் தொடர்பில் குழுவில் வெளிப்படுத்தினர்.
 
இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகள், GSP பிளஸ், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க பிராந்தியங்களுடனான வர்த்தகத் தொடர்புகளின் தற்போதைய நிலை பற்றி குழுவில் விடயங்களை முன்வைத்ததுடன், இது தொடர்பில் குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
 
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் 2023.09.19 ஆம் திகதி சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
 
 
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க பிராந்தியங்களுடனான வர்த்தகத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை தூதரகங்களில் பணியாற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விரிவான தலையீட்டின் அவசியம் தொடர்பில் விளக்கிய குழு, அதற்குத் தேவையான நடவடிக்கையை தாமதமின்றி எடுக்குமாறு வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.
 
பாராளுமன்ற உறுப்பினர்களான, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், நிரோஷன் பெரேரா, யதாமினி குணவர்தன, மதுர விதானகே அகிய குழுவின் உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குழுவின் தலைவரின் அனுமதியுடன் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
 
வெளிவிவகார அமைச்சு, இலங்கை மத்திய வங்கி, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் சிலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதுடன், ர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குவின் இளைஞர் பிரதிநிதிகள் சிலரும் குழுவின் தலைவரின் அழைப்பில் கலந்துகொண்டனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image