நுண் கடன் செலுத்த குறைந்த வட்டியில் கடன்

நுண் கடன் செலுத்த குறைந்த வட்டியில் கடன்

நுண் கடன் பெற்றவர்கள் அக்கடனை செலுத்துவதற்கு மாவட்டச் செயலகத்தினூடாக ஒரு இலட்சம் ரூபா கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தனியார் நிறுவனங்கள் 25,% மற்றும் 30% வட்டிக்கு நுண்கடனைப் பெற்று அக்கடனை மீள செலுத்த முடியாத நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறித்த கடனை செலுத்துவதற்கு மாவட்ட செயலாளர்களூடாக கடன் பெற்றவர்களுக்கு 6 வீத வட்டியில் கடன் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறிதத கடன் தவணை முறையில் கடன் பெற்றவர்கள் மீள மாவட்ட செயலாளருக்கு செலுத்த வேண்டும்.

மாவட்டச் செயலாளர் குறித்த ஒரு இலட்சம் ரூபா கடனை நேரடியாக நுண்கடன் பெற்றவருடைய கைகளின் ஒப்படைக்காமல் நேரடியாக நுண் கடன் வழங்கிய தனியார் நிறுவனத்திற்கு பிரதேச செயலாளரூடாக செலுத்துவார் என்று சமுர்தி, வீட்டுப்பொருளாதார, நுண்கடன், சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

வழங்கப்படும் குறித்த ஒரு இலட்சம் ரூபா கடனை அதிகரிக்க ஜனாதிபதி செயலாளர், மத்திய வங்கி ஆளுநர், நிதியமைச்சின் செயலாளர் ஆகியோருடன் எதிர்வரும் வாரங்களில் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாகவம் அமைச்சர் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image