நாட்டின் தற்போதைய சூழ்நலையில், பாடசாலைகளை வாரத்தில் ஐந்து நாட்களும் நடத்துவதென்பது பெரும் நெருக்கடியான விடயம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளது.
All Stories
வேலை அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் வெளிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று தெரிவித்தார் என்று ஒப்சர்வர் பத்திரிகைக்கு தெரிவித்தார்.
ஐந்து மாதங்களாக சமையல் எரிவாயு இன்றி தாம் பரிதவிப்பதாகவும், எனவே, தங்களுக்கு கூடியவிரைவில் சமையல் எரிவாயுவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் நோர்வூட், புளியாவத்தை கடைவீதியில் வசிக்கும் மக்கள், நேற்று (03) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வருடத்தின் (2022) முதல் ஐந்து மாதங்களில் 288,645 பேர் தமது கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொண்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரான குடிவரவு மற்றும் குடியகல்வு பிரதி கட்டுப்பாட்டாளர் பியூமி பண்டார தெரிவித்தார்.
தூர சேவைகள் மற்றும் கிராம மட்டத்திலான பஸ் சேவைகள் நாளை(06) முதல் வழமைபோன்று இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள வயல் காணிகளை, விவசாய நடவடிக்கைக்காக மீண்டும் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம்(02) லிட்ரோ எரிவாயு கொள்கலன்களை கொள்வனவு செய்யக்கூடிய விற்பனை நிலையங்களின் விபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தொலைதொடர்பு வரியை 11.25 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உரிய தினத்தில் சம்பளத்தை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைளை முன்வைத்து இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று (01) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளைய தினம் (06) ஆரம்பமாகவுள்ளன.
தொழிற் திணைக்களத்தின் பிரதான மற்றும் மாவட்ட அலுவலகங்களை வௌ்ளிக்கிழமைகளை மூட தீர்மானித்திருந்தபோதிலும் தொழில் திணைக்களத்தினூடாக வழங்கப்படும் பொதுமக்களுக்கான சேவையில் எந்த தடையும் இல்லை என்று தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.