அரச ஊழியர்களுக்கு சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பற்ற வகையில் சம்பளமற்ற விடுமுறை வழங்கல் தொடர்பான சுற்றுநிருபம் இன்று (22) இன்று வௌியிடப்பட்டுள்ளது.
All Stories
அரச ஊழியர்களுக்கு எரிபொருளை வழங்க பிரதேச செயலக மட்டங்களில் ஏற்பாடு செய்யாவிட்டால், குறைந்தது 300,000 அரச ஊழியர்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று, இலங்கை அரச அதிகாரிகள் தொழிற்சங்கம் (SLGOTUA) எச்சரித்துள்ளது.
ஆசிரியர்களின் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயத்த விளக்கமளித்துள்ளார்.
வெளிநாட்டு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வைத்திருப்பவர்கள் கோவிட் 19 காப்புறுதி (இன்சூரன்ஸ்) வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வர்த்தக மற்றும் சொகுசு கப்பல்களில் பல புதிய துறைகளில் வேலைவாய்ப்புகள் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு பாரிய கேள்வி நிலவுவதாகவும் அதற்காக பயிற்சிகள் வழங்க விரிவான வேலைத்திட்டங்கள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் எதுறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிக்க நகரங்களிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு அடுத்த வாரம் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடி நிலைமையில் சுகாதார ஊழியர்கள் எரிபொரளை பெற்றுக் கொள்வதற்கான விசேட பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எரிபொருள் வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் கா.பொ.த.சாதாரண தர பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் முன்னெடுத்த பணி பகிஸ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கிய உறுதிமொழிகளையடுத்து கைவிடப்பட்டது.
நிலமற்றோருக்கு நிலவுரிமையை உறுதிப்படுத்துவதற்கான தேசியத் தினமாக ஜூன் மாதம் 21ம் திகதி பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் அறிவித்துள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கல்வி அமைச்சில் முக்கியமான ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு முன்னர் இந்த நிறுவனங்களின் சட்டபூர்வமான தன்மையை கருத்தில் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) கோரிக்கை விடுத்துள்ளது.
அரச ஊழியர்கள் இரு வாரங்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச நிருவாக, உள்விவகார, உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சு வௌியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.