2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை வழங்குமாறு, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதித் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் கோரிக்கை விடுத்துள்ளார்.
All Stories
கிராம அலுவலகர் பிரிவு மட்டத்திலிருந்து சகல தரப்பினரையும் இணைத்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்
அரச உத்தியோகத்தர்களின் பணிமூப்பு மற்றும் ஓய்வூதியம் பாதிக்கப்படாத வகையில், நாட்டிற்குள் அல்லது வெளியில் செலவழிக்க ஐந்து வருட ஊதியமில்லாத விடுமுறை வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சம்பளத்தை 75 வீதத்தால் அதிகரிக்காவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று இலங்கை பெருந்தோட்டத்துறை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஓய்வுபெறும் வயதை 60 ஆக குறைப்பதற்கான சுற்றறிக்கை அடுத்த இரு தினங்களில் வெளியிடப்படுமென பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன தெரிவித்தார்.
14 ஆயிரத்து 22 கிராம சேவகர் பிரிவுகளையும், கிராமிய, பொருளாதார மற்றும் புத்தாக்கல் சக்தி கேந்திரமாக விரைவில் மேம்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்றில் இன்று அறிவித்தார்.
அரச ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள 1,550 கோடி ரூபாய் ஓய்வூதிய கொடுப்பனவு பணிக்கொடைத் தொகையை 06 மாதங்களுக்குள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் அனுமதியின்றி புறக்கோட்டை பகுதியில் சுற்றுலா முகவர் நிலையமொன்றை நடத்தி வந்த நபரொருவர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகமான பணம் இருந்தமை தெரியவந்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை இடம்பெறவுள்ளது.
அனைத்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் நகர்ப்புற தோட்ட சமூகத்திற்கும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் உலக உணவுத் திட்டத்தின் கீழ் விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வௌிநாட்டு வேலை வாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள ஒவ்வொரு ஐந்து குடும்பங்களில் நான்கு குடும்பங்கள் உணவைத் தவிர்க்க அல்லது உண்ணும் உணவின் அளவைக் குறைக்கப் பழகிவிட்டனர் என்றும் இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மோசமடையும் என்ற அச்சம் நிலவுவதாகவும் உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது.
இலங்கையில் முறைசாரா துறையில் சம்பளம் பெயரளவிற்கு உயர்ந்துள்ள போதிலும், பணவீக்கம் காரணமாக சம்பளம் உண்மையில் அடிப்படையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக ECONOMY NEXT இணையத்தளம் வெளிப்படுத்துகிறது.