அனுதியின்றி சுற்றுலா முகவர் நிலையம் - ஒருவர் கைது

அனுதியின்றி சுற்றுலா முகவர் நிலையம் - ஒருவர் கைது

மத்திய வங்கியின் அனுமதியின்றி புறக்கோட்டை பகுதியில் சுற்றுலா முகவர் நிலையமொன்றை நடத்தி வந்த நபரொருவர் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகமான பணம் இருந்தமை தெரியவந்துள்ளது.

குற்றவியல் திணைக்களம் மத்திய வங்கி அதிகாரிகளுடன் இணைந்து உண்டியல் முறையில் பண வியாபாரம் செய்பவர்களை தேடல் மேற்கொண்ட போதே குறித்த பகுதியில் இடம்பெற்றபோதே இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 2400 அமெரிக்க டொலர்கள், 900 அவுஸ்திரேலிய டொலர்கள், 1000 ஸ்ரேலிங் பவுன், 40,000 ஜப்பான் யென், 200 யுரோ கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்திய வங்கியின் விசாரணை அதிகாரிகள் குறித்த நபருக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image