அரச ஊழியர்களின் 5 வருட ஊதியமற்ற விடுமுறைக்கான சுற்றுநிருபம் வௌியீடு

அரச ஊழியர்களின் 5 வருட ஊதியமற்ற விடுமுறைக்கான சுற்றுநிருபம் வௌியீடு

அரச உத்தியோகத்தர்களின் பணிமூப்பு மற்றும் ஓய்வூதியம் பாதிக்கப்படாத வகையில், நாட்டிற்குள் அல்லது வெளியில் செலவழிக்க ஐந்து வருட ஊதியமில்லாத விடுமுறை வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஜூன் 13 அன்று, அரசாங்க ஊழியர்கள் வெளிநாட்டில் வேலை அல்லது பிற உற்பத்திப் பணிகளுக்காக அல்லது நாட்டில் தனியார் துறையில் பணியாற்றுவதற்காக ஊதியம் இல்லாத விடுப்பு எடுக்க அனுமதிக்கும் வகையில் தற்போதுள்ள விதிகளை திருத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பின்னர் ஜூன் 23 அன்று, இந்த விவகாரம் குறித்து ஆராய ஏழு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது மற்றும் அந்த குழு தனது அறிக்கையை அமைச்சரவைக்கு அதன் பரிந்துரைகளுடன் சமர்ப்பிக்க பணித்தது.

திங்கட்கிழமை (செப். 05), குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் என்ற வகையில் பிரதமரால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image