அரச ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் அலி சப்ரி வௌியிட்ட முக்கிய கருத்து

அரச ஊழியர்கள் தொடர்பில் அமைச்சர் அலி சப்ரி வௌியிட்ட முக்கிய கருத்து

அரச ஊழியர்கள் தொடர்பில் வௌிவிவகார  அமைச்சர் அலி சப்ரி அண்மையில் பாராளுமன்றத்தில் கருத்து வௌியிட்டார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான இறுதிநாள் விவாதத்தில் அவர் உரையாற்றுகையில்,

நாட்டிற்கு 1600 பில்லியன் வருமானம் கிடைக்கும்போது 3800 பில்லியன் செலவாக அமைந்துள்ள நிலையிலும் சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சலுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.  இது மிகவும் சிறந்த வரவு செலவு திட்டமகும். இது முதலாவது நடவடிக்கை. இதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்.

நாடு எதிர்கொண்டுள்ள மோசமான  சூழ்நிலையில் போராட்ட அரசியலை விடுத்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். வெறுமனே பேசி அறிக்கைகளை விடுவதை விட பொறுப்புக்களை பாரமெடுத்து செய்வதே கடினமான விடயம். விமர்சனம் செய்பவர்கள் அதனை புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த மே நான்காம் திகதி நிதியமைச்சர் என்ற வகையில் நான் நாட்டின் நெருக்கடி நிலையை பாராளுமன்றத்தில் அறிவித்தேன். அதன் பின்பே நாம் இந்தளவு முன் செல்ல முடிந்துள்ளது. தற்போது நாட்டில் எரிவாயு, எரிபொருள் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கண்டுள்ளோம். 

அதன் மூலம் எமது ரூபாவின் பெறுமதியை கட்டுப்படுத்த முடிந்துள்ளது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் உதவி எமக்கு கிடைத்ததும் மேலும் அதனை கட்டுப்படுத்த முடியும். அத்துடன் நிதி அமைச்சை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையிலேயே நான் திதி அமைச்சை அன்று பொறுப்பேற்று, உடனடி நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டோம். 

மத்திய வங்கி ஆளுநர் உட்பட துறைசார் நிபுணர்கள் பலருடனும் நாங்கள் எதிர்கொண்டுள்ள நிலைமையை விளக்கி, அதற்கு உடனடியாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை கலந்துரையாடினோம்.  அனைவரது ஆலாேசனைகளுடன் மேற்கொண்ட தீர்மானங்கள் காரணமாகவே இன்று எமக்கு வாழ்க்கையை கொண்டுசெல்ல முடியுமாகி இருக்கின்றது. இல்லாவிட்டால் மக்கள் வீதிக்கிறங்கி, எமது நாடு அத்தியோப்பியா, லெபனான் போன்ற நிலைக்கு சென்றிருக்கும்.

மேலும் 2021 ஆம் ஆண்டு எமது வருமானம் 1600 பில்லியன் ஆகவும் செலவு 3800 பில்லியனாகவும் இருந்துள்ளது. வரிவருமானம் குறைந்து, சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்டு, ஏற்றுமதி வருமானம் குறைந்து, அன்னிய செலாவணி பெருமளவு குறைந்ததாலேயே அந்த நிலை ஏற்பட்டது. 

பாரிய அரசசேவை எமக்கு உள்ளது. 1994 ஆம் ஆண்டு அரச சேவை ஊழியர்கள் எண்ணிக்கை 6 லட்சம் ஆகும். தற்போது அரச ஊழியர்கள் எண்ணிக்கை 15 லட்சம் ஆகும். சுதந்திரம் கிடைத்தபோது அரச சேவையில் ஊழியர்கள் எண்ணிக்கை நூற்றுக்கு ஒருவர் ஆவர். ஆனால் தற்போது 14 பேருக்கு ஒரு அரச ஊழியர் இருக்கின்றார்.  ஆனால் சேவையில் மாற்றத்தை எமக்கு காண முடியவில்லை.

நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் உள்ளன. அதற்காக பெருமளவான வட்டிவீதம் வருடாந்தம் செலுத்தப்படுகின்றது. சம்பளம் ஓய்வூதியம் மற்றும் சமூர்த்தி,  உர மானியம் என்பனவற்றை வழங்கும்போது வருமானம் அந்த இடத்திலேயே இல்லாமல் போகிறது. கடன் செலுத்த கடன் வாங்க வேண்டி உள்ளது. வெவ்வேறு இடங்களில் கடனைப் பெற்று நாம் இதனை செலுத்தி இருக்கின்றோம். 

நாட்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது சுமார் 1000 பேரே ஒரு மில்லியன் ரூபா வரியை செலுத்துகின்றனர். அதனால் வரி கொள்கையில் மறுசீரமைப்பு செய்யவேண்டும் - எனறார்.

மேலும் செய்திகள் நாட்டிலிருந்து வௌியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பாடசாலை தவணை விடுமுறை குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image