அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் போனஸ் குறித்து வெளியான புதிய தகவல்

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் போனஸ் குறித்து வெளியான புதிய தகவல்

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் மேலதிக கொடுப்பனவு தொடர்பில், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தகவல் வெளியிட்டுள்ளார்.

'ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு' என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்ட தகவலை வழங்கியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபையை மறுசீரமைக்க வேண்டும் என அந்த நிறுவனங்களின் பெரும்பாலான ஊழியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தொழிற்சங்கத் தலைவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தினாலேயே அவர்கள் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.

ஆனால் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்தில் சம்பள உயர்வு, மேலதிக கொடுப்பனவு கோரிக்கை என்பவற்றை ஏற்க முடியாது. உலகின் எந்தவொரு நாடும்அவ்வாறு செய்யாது.

எனவே அவ்வாறான செயற்பாடுளை நாம் நிறுத்த வேண்டும். 24,000 மின்சார ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 25மூ சம்பள உயர்வு வழங்கப்படும். நாங்கள் அதனை நிறுத்தியுள்ளோம்.

செயல்திறனுடன் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத்திரமே சம்பள உயர்வை வழங்க முடியும். அனைத்து ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்கும் நிறுவனங்கள் உலகில் எந்த நாட்டிலும் இல்லை.

ஏப்ரல், டிசம்பர் மாதங்களில் வழங்கப்படும் போனஸ் நிறுவனம் லாபம் ஈட்டினால் மட்டுமே வழங்கப்படும். அதுவும் திறம்பட வேலை செய்யும் ஊழியர்களுக்கு மட்டுமே. ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாத போனஸ் கொடுப்பனவுகளும் நிறுவனங்கள் இலாபமீட்டினால் மட்டுமே வழங்கப்படும்.  அதுவும் செயல்திறன் மிக்க ஊழியர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும். – என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image