யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்ககோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வைத்தியசாலை பணிப்பாளருக்கும் வட மாகாண ஆளுநருக்கும் அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
All Stories
நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 ஏப்பிறலில் தயாரித்தல் நடவடிக்கைகளில் சுருக்கத்தினையும் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலையும் எடுத்துக்காட்டுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தேயிலை தினம் ஒவ்வொரு வருடமும் மே 21 திகதி கொண்டாடப்படுகிறது.
சம்பள அதிகரிப்பு கோரும் சிறைச்சாலை அதிகாரிகளின் கோரிக்கையை நியாயமானது. அதனால் அவர்களுக்கு 15,000 ரூபா கொடுப்பனவு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
சப்ரகமுவ மாகாணத்துக்குரிய தமிழ்மொழி பாடசாலைகளுக்கு அதே மாவட்டத்திலுள்ள பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மாகாண மட்டத்திலான தொழிற்சங்க நடவடிக்கை மேல் மாகாணத்திலும் இன்று (21) அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி தெரிவித்தார்.
தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இன்று(22) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்திக்கவுள்ளனர்.
போலி வைத்தியர்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்காக, சுகாதார அமைச்சு 1907 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்தினால் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டாலும், 1700 ரூபா சம்பளத்தை விடவும் குறைந்த தொகைக்கு செல்வதற்கு தயாரில்லை என தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.