பட்டதாரி ஆசிரியர்களுக்கு அதே மாகாணத்தில் நியமனம்

பட்டதாரி ஆசிரியர்களுக்கு அதே மாகாணத்தில் நியமனம்

சப்ரகமுவ மாகாணத்துக்குரிய தமிழ்மொழி பாடசாலைகளுக்கு அதே மாவட்டத்திலுள்ள பட்டதாரி ஆசிரியர்களை உள்வாங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ்மொழி பாடசாலைகளுக்கு அந்த மாவட்டத்திலுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டு வெளி மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளமை தொடர்பில் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட பட்டதாரி ஆசிரியர்களால் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் ஜீவன் தொண்டமான், இந்த ஆசிரியர்களுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், “மலையக கல்வி வளர்ச்சியில் ஆரம்பக்காலம் முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பின்வாங்காத செயற்பாடுகளை செய்து வருகின்றது. அதனடிப்படையில் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் பாடசாலைகளில் காணப்படும் பட்டதாரி ஆசிரியர்களின் பற்றாக்குறையை தீர்க்க இந்த மாவட்டத்திலுள்ள பட்டதாரி ஆசிரியர்களை உரிய பாடசாலைகளுக்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேநேரம் இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கமைய விரைவில் உரிய தீர்வு பெற்று தரப்படும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

May be an image of 14 people and people studying

May be an image of 7 people, people studying and text

May be an image of 6 people, people studying and text

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image