ரயில்வே திணைக்களத்தின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த மாதத்திற்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
All Stories
தமது கோரிக்கைகளுக்கு வழங்கப்பட்ட இணக்கப்பாடுகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் இன்று (09) முதல் மாகாண மட்டத்தில் வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
வடமத்திய மாகாண சபைக் கட்டடத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 22 வேலையற்ற பட்டதாரிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பளத்தை காரணம் காட்டி, தோட்டங்களை கையளித்து விட்டு கம்பனிகளை போக சொல்ல வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரான, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அரசாங்க வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 3,000 தாதியர்களை புதிதாக இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று (06) உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (06), நாளையும் (07) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய ஆசிரியர் சபையை நிறுவ அமைச்சரவை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்கள், மாகாண அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானங்களை பெருந்தோட்டக் கம்பனிகள் மீறி நடக்க முடியாது என்று இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கச் செயலாளரும் பெருந்தோட்ட விவகாரங்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.