தாதியர்கள் உள்ளிட்ட 72 தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்று(15) வடமேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.
All Stories
இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாளில் சில வினாக்களுக்கு இலவசப் புள்ளிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் நடைபெற்றுவரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக இன்று (13) திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், பல்கலைக்கழக வாயிலில் அல்லது அருகில் உள்ள நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தப்படவுள்ளது.
அந்தவகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்று காலை 10.00 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் அதனைத் தொடர்ந்து மாணவர் ஒன்றியத்தினருடன் இணைந்து ஊடக சந்திப்பு ஒன்றும் நடைபெறவுள்ளது
ரஷ்ய - உக்ரேன் போருக்காக ஓய்வு பெற்ற இலங்கை பாதுகாப்பு படை வீரர்களை சட்டவிரோத வழிகளில் ஆட் கடத்தல் செய்தல் தொடர்பான தகவல்களைப் திரட்டுவதற்கு விசேட பிரிவு ஒன்றை நிறுவியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பெருந்தோட்ட கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியமென வலியுறுத்திய நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், அதற்கு எதிராக கம்பெனிகள் மேற்கொள்ளும் நீதிமன்ற நடவடிக்கைளுக்கு முகம்கொடுக்கத் தயாரெனவும் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 3% ஆக உயரும் என எதிர்பார்ப்பதாகவும் அதற்கமைய அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நீதிமன்ற தீர்ப்புகள் தடையாக அமையாவிட்டால் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க முடியும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் புதன்கிழமைக்கு முன்னர் முதலாளிமார் சம்மேளனம் இறுதி தீர்மானத்தை அறிவிக்காவிட்டால், 1350 ரூபா அடிப்படை சம்பளத்துடன் 1700 ரூபாவை நாளாந்த சம்பளமாக நிர்ணயித்து மீண்டும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டிற்கான சம்பள அதிகரிப்பு கோரிக்கைகள் வந்தாலும் அரச வருமானம் அதற்குத் தகுந்த வகையில் அதிகரிப்பை காண்பிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன்
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
பல கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று (13) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டணி தீர்மானித்துள்ளது.
2100 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.