தனியார்துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்துவதற்கான சட்டமூலததை பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
All Stories
தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு தற்போது காணப்படும் குறைந்தபட்ச வயதெல்லையை 60வயது வரைக்கும் நீடிப்பதற்கு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்க சேவை ஆணைக்குழுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சைக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளன.
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் எதிர்வரும் திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பில் பிரதமர் தலைமையில் இன்று நண்பகல் (12 மணிக்கு) இடம்பெறும் பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும நம்பிக்கை வெளியிட்டார்.
2012ஆண்டுக்கு பின்னர் சேவையில் இணைக்கப்பட்டு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் தகவல்களை உடனடியாக தமக்கு அனுப்பி வைக்குமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்களின், கட்டாய ஓய்வுபெறும் வயதெல்லையை 63 ஆக நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்க சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சினால் நேற்று இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல், இந்த நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதாகவும், வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1934 ஆம் ஆண்டு 5 ஆந் திகதி வெளியிடப்பட்ட ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் 51 ஆம் பிரிவின் திருத்தப்பட்டவாறான 1948 ஆம் ஆண்டின் 13 ஆம் ஓய்வூதிய கட்டளைச் சட்டத்தின் கீழான அறிவித்தல் அறிவிததல்.
காலத்திற்குக் காலம் திருத்தப்பட்ட ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் பிரிவு 2 மற்றும் 17 ஆம் ஏற்பாடுகளின் கீழ் 2021.07.08 ஆந் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இல. 2235/60 இல் குறிபபிடப்பட்டுள்ள ஒவ்வொரு பதவிக்கும் உரிய கட்டாய ஓய்வூதிய வயதெல்லை திருத்தம் செய்யும் அட்டவணையில் தற்போது உள்ள பதவிகளுக்கு மேலதிகமாக குறித்த பதவியையும் சேர்த்து மேலும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
சில அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (11) இடம்பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் ஆசிரியர் சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையில் நடைபெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டு பிரச்சினையை தீர்ப்பதற்காக முதலமைச்சருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்திக்கொடுக்க தயார் என்று கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.