வங்கி ஊழியர்கள் உரிமை மீறல் தொடர்பில் தொழில் அமைச்சர் கவனத்திற்கு

வங்கி ஊழியர்கள் உரிமை மீறல் தொடர்பில் தொழில் அமைச்சர் கவனத்திற்கு

வங்கி ஊழியர்களின் உரிமைகள் மீறல்கள் தொடர்பில் அறிக்கைகள் வௌிவந்துள்ள நிலையில் அது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்திடம் CBEU) உறுதியளித்துள்ளார்.

அண்மையில் தொழில் அமைச்சில் தொழில் அமைச்சருக்கும் இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

வங்கித் துறையில் உள்ள சில தொழில் வழங்குநர்கள் தமது ஊழியர்களை குறிவைத்து குறிப்பாக பதவி உயர்வுகள் வழங்கும் போது பழிவாங்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இது நாட்டின் தொழிலாளர் சட்டம் மற்றும் ஏனைய வழமையான நடைமுறைகளுக்கு எதிரானது எனவும் இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்க குற்றம் சுமத்தினார்.

உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர் இத்தகைய உரிமை மீறல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தொழில் ஆணையாளர் பி. கே. பிரபாத் சந்திரகீர்த்திக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும், மூன்று வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் புதிய கூட்டு உடன்படிக்கைகளை மேற்கொள்வதில் அரச வங்கிகளின் அதிகாரிகள் தேவையற்ற காலதாமதம் செய்வது குறித்தும் திஸாநாயக்க கவலை தெரிவித்ததையடுத்து குறித்த தாமதத்திற்கான காரணங்களையும் கண்டறியுமாறு அமைச்சர் தொழில் ஆணையாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கினார்.

சுயாதீன தொழிற்சங்கமாக இயங்கும் இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தில் 18 வங்கிகளை சேர்ந்த 30,000 பேர் அங்கம் வகிக்கும் பலம் மிக்க தொழிற்சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image