அடுத்த இரண்டு வருடங்களுக்குள் பயிரிடப்படாத அனைத்து அரச காணிகளிலும் தேயிலை செய்கையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
All Stories
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொவிட்-19 வகை பிறழ்வான ஒமிக்ரோன் திரிபு தொடர்பான ஏழு முக்கிய காரணிகள் தொடர்பாக ஸ்ரீP ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர வெளிப்படுத்தியுள்ளார்.
அறிவார்ந்த அரசியல் உரையாடலை மலையக அரசியல் தளத்தில் உருவாக்கும் நோக்கில் 'மலையக அரசியல் அரங்கம்' எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று அவ்வமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாவது டோஸ் தடுப்பூசியை ஏற்றி மூன்று மாதங்கள் கடந்த 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், நடமாடும் சேவை மூலம் மூன்றாவது தடுப்பூசியை (டீழழளவநச) ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டுப்பாடுகள் குறைந்து காணப்படுவதனால் சுகாதார பிரிவுகளை கடந்து பயணிகள் நாட்டுக்குள் நுழைய முடியும் என்றும் இதனால் ஆப்பிரிக்காவில் தற்போது அடையாளங்காணப்பட்டுள்ள அபாயகரமான புதிய கொவிட் 19 திரிபுகள் நாட்டுக்குள் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளை சேர்ந்தவர்கள் சிங்கப்பூருக்குள் பிரவேசிப்பதற்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள், அடுத்த மாதம் முதல் தளர்த்தப்படுவதாக சிங்கப்பூர் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
உலக தொழிலாளர் ஸ்தாபனம் முன்மொழிந்துள்ள C190 சமவாயத்தினை இலங்கை அரசு இதுவரை அங்கிகரிக்காது இருப்பது தொழிசார் சமூகத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழந்துள்ளதாகவே கருதவேண்டியுள்ளது என்கிறார் பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி நிறுவனம் தலைவர் தங்கவேல் கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கிய 7பேர்ச் காணிகளில், அவர்கள் சொந்தமாக வீடு கட்டிக்கொள்வதற்கு இடமளிக்கவேண்டும்.
எதிர்வரும் டிசம்பர் 8ம் திகதி சுகயீன லீவு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மின்சாரசபை ஊழியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தாம் முதற்கட்ட நடவடிக்கையையே ஆரம்பித்துள்ளதாகவும், மேலும் இரண்டு வழிமுறைகள் தங்களது சங்கத்தால் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் 'சட்டப்படி வேலை செய்யும்' தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வுக்கான 16 நாட்கள் உலக பிரசார நடவடிக்கையின் ஆரம்ப தினமான இன்று (25) பாராளுமன்ற பெண் பிரதிநிதிகள் ஆரஞ்சு வர்ண சேலைகள் அணிந்து தமது ஆதரவை வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.