பெருந்தோட்ட மக்கள் வாழும் 102 பிரதேச செயலக பெயர் பட்டியல், நிதி அமைச்சுக்கும், உலக வங்கிக்கும் கையளிக்கப்பட்டுள்ளது.
All Stories
அரச உத்தியோகத்தர்களுக்கு மாவட்ட மட்டத்தில் நடத்தப்படும் பயிற்சிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இலங்கையின் நிலையான மற்றும் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் முன்னணி சர்வதேச எரிபொருள் நிறுவனமான சினோபெக் உடன் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
மூன்று நாட்களுக்குள் வீட்டிலிருந்தவாறே தமக்கான கடவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ளும் வகையில் விசேட செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்பவும், நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளவும் அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்ப கல்வியியற் கல்லூரியில் பயிற்சிபெற்ற 7,800 டிப்ளோமாதாரிகளுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாட்டில் வரி அறவீட்டு நடவடிக்கைகளை உரிய முறைமையின் மூலம் முனனெடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக ஒரு வருடத்திற்கும் மேல் பணியாற்றி உயிரிழந்த பதுலை தெமோதர பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார், எனவே, அவரது மரணத்திற்கும் நீதி வேண்டும் என ப்ரொட்டெக் தொழிற்சங்த்தின் உப தலைவி கருப்பையா மைதிலி கோரிக்கை விடுத்தார்.
அரசாங்கத்தின் கொள்கை ரீதியான திட்டங்களுடன் இணைந்து செயற்படுமாறு அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுக்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உயர்தர விடைத்தாள் மதிப்பீடு தொடர்பாக, 11 பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் 32 மையங்களில் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
கட்டாரில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்த நபரொருவரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.