வௌிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது!

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது!

 கட்டாரில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்த நபரொருவரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டாரில் தொழில்வாய்ப்பைப் பெற்றுத் தருவதாக கூறி 37 பேரிடமிருந்து 57 இலட்சம் ரூபாவை இந்நபர் மோசடி செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் குறித்த நபர் தொடர்பாக 37 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

வௌிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கான பதிவுகள் இல்லாத குறித்த நபர் பேஸ் புக் மூலமாக விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வந்துள்ளார் என்று விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த நபர் இரு 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மோசடி செய்த பணத்தை மீள செலுத்துமாறு அல்லது உறுதியளித்த வகையில் வௌிநாட்டு வேலைவாய்ப்பினை ஒரு மாதத்திற்கும் திருப்பி செலுத்தவேண்டும் என்று மேலதிக நீதவான் சஞ்ஜய எல். எம் விஜயசிங்க உத்தரவிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image