விரைவில் வழங்கப்படவுள்ள கல்விக் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படவுள்ளது. அதனை உடனே தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.
All Stories
பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கரிசனை வெளியிட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களால்;, பல இலங்கையர்கள், பிரித்தானியாவிற்கு கடத்தப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் ஸ்கை நியூஸ் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சமுக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.
பொலிஸ்காவலின்கீழ் நிகழும் மரணங்கள் தொடர்பில் மீண்டும் கவனம் குவிக்கப்படுவதற்குக் காரணமாகியுள்ள ராஜகுமாரியின் உயிரிழப்பு தொடர்பில் கடும் கண்டனம் வெளியிட்டிருக்கும் சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளைப் பணி இடைநிறுத்தம், பணி இடமாற்றம் செய்வதைவிடுத்து, அவர்களைக் கைதுசெய்து உச்சபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர.
நீதிமன்றத்தின் தடை யுத்தரவை நீக்கி பட்டதாரிகளுக்கான போட்டிப்பரீட்சையை நடத்துவதற்கு சட்ட மா அதிபரின் ஊடாக நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாட்டில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மக்களை ஏமாற்றுவது அதிகரித்து வருவது தொடர்பில் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கவலை வௌியிட்டுள்ளது.
சாதாரண தர பரீட்சை இடம்பெறுகின்ற சந்தர்ப்பங்களிலும், உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள தொழில் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்புக்கான சட்ட மூல வரைவை எதிர்வரும் ஜூன் மாதம் மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
சமகால அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தொலை நோக்கு திட்டத்தில் எதிர்வரும் ஜூன், ஜூலை மாதங்களில் மின்சாரம் கட்டணம் முதலானவை குறையும் வாய்ப்பு உண்டு என்று தெரிவித்த அமைச்சர், தாய் அல்லது தந்தையை இழந்த ஊழியர்களின் பிளைளைகளின் நல்வாழ்வுக்கு உதவக்கூடிய வழிமுறைகள் இருக்க வேண்டும். இதேபோன்று பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப் பணிப்பெண்கள் ஆகியோரின் நலன்களும் தொழில் சட்ட மூலம் உறுதி செய்ய்க்கூடியவகையில் தற்போதைய தொழில் சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள தொழில் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கான கலந்தாய்வுக் குழு கூட்டத்தின் நான்காவது அமர்வு அண்மையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் நாணயக்கார இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
இன்றைய அமர்வில் தேசிய தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் லெஸ்லி தேவேந்திரா கண்டி பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி எஸ்.ரணராஜா கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட விரிவுரையாளர எஸ். சரவேஸ்வரன் கட்டிட நிர்மாணத்துறை விரிவுரையாளர் எம். கேசவன் உள்ளிட்ட பலர் தொழில் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான கருத்துக்களை முன்வைத்தனர்.
சட்டவரைவு மேற்கொள்ளப்பட்ட போதிலும் அதனை மீண்டும் இதுபோன்ற மக்களின் கருத்தாய்வுக்கு உட்படுத்தப்படும். அதன் போது மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்களுக்கு முக்கியத்துவம் வழங்கிய பின்னரே அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும். இது தொடர்பில் எவராவது நீதிமன்றம் செல்லவிரும்பினால் அதற்கும் இடமளிக்கப்படும். இதன் பின்னர்தான் திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
தற்போதைய பொருளாதாரத்திற்கு மத்தியில் வேலை வாய்ப்பின்றி இருப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கவா ? இந்த முயற்சி என்று சிலர் இதனை விமர்சிக்கின்றர். அவ்வாறான உள்நோக்கம் எதுவும் இல்லை நாட்டை அபிவிருத்தி செய்வதுடன் பாட்டாளி மக்களின் நலன்களையும் சமூக பாதுகாப்பையும் முன்னிலைப்படுத்தி பரந்துப்பட்ட நோக்கத்துடன் சமகால அரசாங்கம் வெளிப்படையாகவே மேற்கொள்கிறது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கின்றார்கள் இவர்களின் சமூக பாதுகாப்பு முக்கியமானது. இதேபோன்று ஒரு ஊழியர் பணியாற்றும் நிறுவனத்திலும் அவருக்கு ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி உறுதி செய்யும் தொழில் சட்ட நடைமுறை வேண்டும். வேலை கொள்வோர் மற்றும் ஊழியர்கள் தமது பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான புதிய வழிமுறைகள் கையாள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
இதுவரை 15 தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் சட்டங்களை சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தை கலந்தாலோசித்துள்ளதாகவும், மே 24 மற்றும் 31 ஆம் திகதிகளில் பொது ஆலோசனைகள் நடைபெற உள்ளதாகவும் தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
வெலிக்கடை பொலிஸ் இருந்த நிலையில், உயிரிழந்த 42 வயதான வீட்டுப் பணிபாபெண்ணின் மரணம் தொடர்பான, விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, குற்றப் புலனாய்வு திணைக்களம், நீதிமன்றிற்கு அறியப்படுத்தியுள்ளது.
தற்காலத்துக்கு ஏற்றாற்போல் தொழிற்சட்டங்களை திருத்துவது தொடர்பில் மக்கள் கருத்துக்கள் பெறும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுவது குறித்து பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தொழில் ஆணையாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
அதிபர் சேவை தரம் III இற்கு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.