பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து TIN இலக்கத்தை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
All Stories
தமக்கு TIN இலக்கம் கிடைக்காவிடின் அல்லது இலக்கத்தைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் மாகாண உள்நாட்டு இறை வரித் திணைக்களத்திற்கு அல்லது பிரதேச செயலகத்திற்கு அறிவிக்க முடியும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்க முன்மொழியப்பட்ட 10,000 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் 5,000 ரூபாவை ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை மின்சார சபையை 6 பிரிவுகளாக பிரிப்பது தொடர்பிலான உத்தேச சட்டமூலத்திற்கு இன்று மூன்றாவது நாளாகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 10 சுகாதார தொழிற்சங்கங்கள், இன்று (10) காலை 8 மணிமுதல் நாளை (11) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை, நாளை (09) தொழிலமைச்சில் இடம்பெறவுள்ளது.
நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுளனர் என தான் அறிவதாகவும், இம்முறை தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவான பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கப்பெறும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை இந்த மாத இறுதிக்குள் ஜனாதிபதி அறிவிப்பார் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வற் வரி விதிப்பில் இருந்து விலக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் பட்டியலை நிதி அமைச்சு நேற்று(03) வெளியிட்டது.
நிறைவுகாண் மருத்துவ நிபுணர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் நிபுணர்களின் ஒன்றியம் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அறிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவையான மின் விநியோகத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில், பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களின் சேவையை இடைநிறுத்தி ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்குமாறு துறைசார் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.