வற் வரி விதிப்பில் இருந்து விலக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் பட்டியலை நிதி அமைச்சு நேற்று(03) வெளியிட்டது.
பருப்பு,வெங்காயம் உட்பட விசேட வர்த்தக பொருட்களுக்கான வரி விதிப்புக்கு உட்பட பொருட்களும் வரி விதிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
வற் வரியில் இருந்து விலக்ககளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் கீழ்வருமாறு:
1)
*கோதுமை,கோதுமை மா
*குழந்தை பால் பவுடர்
*மருத்து உற்பத்திகள், மருத்துகள் (வாசனைத் திரவியங்கள் தவிர), மருந்துகளுக்கான மூலப்பொருட்கள்
*ஆயுர்வேத கலவைகள் (வாசனை திரவியம் தவிர), யுனானி, சித்தா அல்லது ஹோமியோபதி கலவைகள், ஆயுர்வேத மருத்து தயாரிப்பு மூலப் பொருட்கள்
*சுத்திகரிக்கப்படாத கனிம எண்ணெய், மண்ணெண்ணெய், விமானங்களுக்கான எரிபொருள், கப்பல்களுக்கு பயன்படுத்தப்படுகிற எண்ணெய், எண்ணெய்
*செயற்கை உறுப்புகள், ஊன்றுகோல், சக்கர நாற்காலிகள், செவிப்புலன் கருவிகள், ஆர்தோடிக்ஸ் அல்லது குறைபாடுகள் உதவக்கூடிய அணியக்கூடிய/உடலில் பொருத்தப்பட்ட சாதனங்கள், பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வெள்ளை தண்டுகள், பிரெய்லி தட்டச்சுப்பொறிகள் & பாகங்கள், பிரெய்லி தட்டச்சுப்பொறி காகிதம், பிரெய்லி தட்டச்சுப்பொறிகள் பலகைகள், ஊனமுற்றோரின் கோரிக்கையை கருத்தில் கொண்டு அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்ட பிற பொருட்கள்
*உயிரியல் உரங்கள், ஆர்ட்டெமியா முட்டைகள், கரி பாசி
*விவசாய விதைகள், விவசாய தாவரங்கள், இறால்களுக்கு வழங்கப்படும் உணவுகள், முயல் உணவுகள், கோழிகளுக்கான “தீவனத்தைத் தவிர ஏனைய விலங்குகளுக்கான உணவு வகைகள்
*ஆடை தொழிலுக்குப் பயன்படும் நூல்
*கைத்தறி தொழிலுக்கு பயன்படுத்தப்படும் நிறமிகள் (சாயம்).
*கல்வி சேவைகள்
*பொது பயணிகள் போக்குவரத்து சேவைகள் (விமான போக்குவரத்து, நீர் போக்குவரத்து, சுற்றுலா போக்குவரத்து மற்றும் டாக்ஸி சேவைகள் தவிர).
*மின்சாரம்
*’அடக்கம் மற்றும் தகனம் தொடர்பான சேவைகள்
*பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய உணவகத்தின் சேவைகள்
*தூதுவர் சிறப்புரிமைகள், அவசரநிலைகள் தொடர்பான சில பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள்
- “வெளிநாட்டு நிறுவனங்களால் நிவாரணமாக வழங்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் *தேசிய பொருளாதாரத்தின் நலனுக்காக வெளிநாட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள்
*நிதி சேவைகள்
- ‘சுகாதார சேவைகள் (மருத்துவமனை அறை கட்டணங்கள் தவிர்த்து) *விசேட வர்த்தக பொருட்களுக்கான வரிக்கு உட்பட்ட பொருட்கள் *உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ஆடைகள் *உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி, அரிசி மாவு மற்றும் பாண் *இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பதப்படுத்தப்படாத விவசாய, விஞ்ஞானபூர்வ பூங்கா அல்லது மீன்பிடி உற்பத்திகள் (தேயிலை இலைகள், மரப்பால், தேங்காய், அனைத்து காய்கறிகள், பழங்கள், விவசாய பொருட்கள், மீன்)
*அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோஸ்
*செஸ் வரிக்கு உட்பட்ட ஆடைகள் |
இலங்கைக்கு வெளியே நுகர்வுக்கு இலங்கை ரூபாயில் பணம் செலுத்தப்படும் சேவைகள்
*”துணிகள் அல்லது ஆடை பொருட்களின் மதிப்பை உயர்த்தும் சேவைகள்
*முதியோர் சேவைகள் மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள்
*மூலோபாய மேம்பாட்டு திட்டத்திற்காக வழங்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள்
*வெளிநாட்டு கடன்கள் அல்லது நன்கொடைகள் என குறிப்பிட்ட திட்டத்திற்காக வழங்கப்படும் பொருட்கள் ‘ அல்லது சேவைகள்
- உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்காக வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள் *| இலங்கை மத்திய வங்கியால் வழங்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் |
*இலங்கை அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படும் சேவைகள்
*தீர்வை வரிக்குட்ப்பட்ட வியாபார நிலைகளுக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள்
*இலவச அனுமதிக்கு தகுதியான காட்சிப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப விளக்கத்திற்காக மறு-ஏற்றுமதி பெறப்பட்ட பொருட்கள், திட்டத்தில் பயன்படுத்தப்படும் மற்றும் மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் அல்லது செயல்முறைகள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்
*| விமான என்ஜின் அல்லது விமான உதிரி பாகங்கள்
*இலங்கை மின்சார சபைக்கு பெற்றோலிய கூட்டுதாபனத்தால் வழங்கப்படும் இரசாயண நெப்டா
*தூதரக சிறப்புரிமைச் சட்டத்தில் தூது குழுவுக்கு வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகள்
*வெளிநாட்டு நாணயங்களில் வரியில்லா விற்பனை நிலையங்களுக்கு வழங்குவதற்காக பொருட்களை இறக்குமதி செய்தல் மற்றும் வழங்குதல்.
2)
2007 இலக்கம் 48 இன் படி விசேட வர்த்தக பொருட்களுக்கான வரி சட்டமூலத்துக்கு உட்பட்ட பொருட்கள்
- நெத்தலி
*உருளைகிழங்கு
*பெரிய வெங்காயம்
*சின்ன வெங்காயம்
*வெள்ளைபூண்டு
*கடலை பருப்பு
*கடலை
*பயறு
*பருப்பு
*காய்ந்த மிளகாய்
*டின் மீன்
*வெள்ளை சீனி - உழுந்து
*கௌபி
*குரக்கன்
*மாசி
*கருவாடு
*கொத்தமல்லி
*சீரகம்
*பெருஞ்சிரம்
*உழுவரிசி
*மஞ்சள்
*கடுகு
*குரக்கன் மா
*உழுந்து மா
*கஜு
*பார்ம் எண்ணெய்,மரக்கறி எண்ணெய்,தேங்காய் எண்ணெய்
*மீன்
*யோகட்
*பட்டர்
*உப்பு
*பேரித்தம்பழம். - மேற்குறித்த பொருட்களும் வெட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.