பாலர் பாடசாலை ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கபடவிருப்பதாக மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமுலம் நேற்று நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளராக திருமதி ஜோனி சிம்ப்சன் ( Joni Simpson ) திங்கட்கிழமை (15) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
72 தொழிற்சங்கங்கள் இன்று (16) காலை 06.30 முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல், போலிப் பற்றுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி, இலாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாக நிறுத்துவதற்கு சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவை ஏனைய சுகாதார ஊழியர்களுக்கும் வழங்குவது தொடர்பில் நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
வீழ்ச்சியடைந்துள்ள பெருந்தோட்டத்துறையை லாபமீட்டும் துறையாக மாற்றியப்பதாக இருந்தால் பெருந்தோட்டத்துறைகளை சிறுதோட்டத் துறைகளாக மாற்றியமைக்க வேண்டும். அதன் மூலமே இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என எம்.வேலுகுமார் தெரிவித்தார்.
பொருளாதார நீதிக்காக 35,000 ரூபா கொடுப்பனவை வழங்கக் கோரி தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஸ் தெரிவித்துள்ளார்.
அலுவலகங்களில் பணிபுரியும் அரச ஊழியர்கள் காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை தங்கள் அலுவலகங்களில் இருந்து பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து TIN இலக்கத்தை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.