நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையை முடித்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கினால் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் நேற்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வருடத்தின் முதல் காலாண்டில், அரச வருமானம் 834 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்திருப்பதாக அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
புத்தாண்டு விடுமுறை நிறைவடைந்து இன்று (24) முதல் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
பெருந்தோட்ட மக்கள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் சில சவால்களை உரியவாறு கையாள்வதற்கான இலக்கிடப்பட்ட நடவடிக்கைகளின் அவசியம் குறித்தும் உலக வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு இன்னும் தீர்க்கப்படவில்லை.
கம்பஹா பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவினால் மனித பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யப்பட்ட அரிசி மாத்திரமே, பாடசாலை போஷாக்குத் திட்டத்திற்காக வெயங்கொடை களஞ்சியத்திலிருந்து பகிர்ந்தளிக்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகத்தின் உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புக்கான செயலகம் அறிவித்துள்ளது.
பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் தொழிற்சங்கங்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள 1,700 ரூபா சம்பள அதிகரிப்பு கோரிக்கை சாத்தியமற்றது என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார ஊழியர் சங்கம் இன்று (24) பொல்துவ சுற்றுவட்டத்தை அண்மித்து நடத்த ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தியும், பெருந்தோட்டக் கம்பனிகளின் அராஜக போக்கை கண்டித்தும் மலையக நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.