இன்று (19) காலை தொடக்கம் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
All Stories
இலங்கையிலுள்ள ஒரேயொரு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமான சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் 1969 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளுக்கான உள்ளுர் கேள்வியின் 25% குறித்த சுத்திகரிப்பு நிலையத்தால் விநியோகிக்கப்படுகின்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1700 ரூபா நாள் சம்பளமாகப் பெற்றுத் தருவதாக கூறியுள்ளது. அதனை நாங்கள் முழுமையாக எற்றுக் கொள்கின்றோம் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நிர்மாணத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை உரிய முறையில் ஆராய்ந்து தற்போதைய பொருளாதார நிலைமையில் அப்பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய தீர்வுகளைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர் குழுவொன்று நியமிக்க இருப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
29,000 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி புலமைப்பரிசில் 2024/2025 திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஏப்ரல் 01 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மலையக தமிழர்கள் தமது தேசிய அடையாளத்தை சனத்தொகை கணக்கெடுப்பின்போது மலையகத் தமிழர் என வெளிப்படுத்துவதற்கான ஏற்பாட்டை உள்வாங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
வெற்றிடமாகவுள்ள 2002 கிராமிய சேவைப் பகுதிகளுக்கான கிராம சேவை உத்தியோகத்தர்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் பணியமர்த்தப்படுவார்கள் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 30 நாட்களுக்குள் சம்பள உயர்வு கிடைக்கப்பெறும்.
பெருந்தோட்ட கம்பனிகள் சில தமது தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய கொடுப்பனவுகளை சரியான முறையில் வழங்கத் தவறியமையினால் தொடுக்கப்பட்ட வழக்குகள் மீதான விசாரணைகளில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை உருவரைச்சட்டகத்திற்காக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
நீண்ட காலமாக இழுபறி நிலையில் காணப்பட்ட ஆசிரிய உதவியாளர் நியமனங்களை வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.