அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவையின் தரம் III பதவிகளுக்காக நியமிக்கப்பட்டாத, பல்வேறு காரணங்களினால் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு முடியாமல் போன பயிலுனர் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் 20,000 ரூபா கொடுப்பனவை ஏப்ரல் மாதத்திற்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
All Stories
இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐ கடந்துள்ளது.
எதிர்வரும் 24, 25ம் திகதிகளில் அரச விடுமுறை தினங்களாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
குறைந்தளவு ஊழியர்களுடன் இன்று (17) முதல் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்தது.
எதிர்வரும் 24ம் மற்றும் 25ம் திகதிகள், அரச விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பிலியந்தலை – ஹெடிகம பகுதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியமை தொடர்பிலான விசாரணைகளுக்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தேசிய பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைப்பது தொடர்பான வேண்டுகோள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பில் தமக்கு அறியத்தருமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் கோரியுள்ளது.
பாடசாலை மீண்டும் தொடங்குவதற்கு முன், ஆசிரியர்கள், அதிபர்கள் உட்பட கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பாக கல்வி அமைச்சுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை பிடித்துள்ளதாக சங்கத்தில் பிரதித் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களாக கொரோனாத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், நாட்டின் முன் நின்று பணிபுரிந்த சுகாதார மற்றும் பாதுகாப்பு ஊழியர்களுக்கு தடுப்பூசிக்குப் வழங்கியதன் பின் மிக ஆபத்தான சூழ்நிலையில் பாதுகாத்ததுடன்பரீட்சைக் கடமைகளில் ஈடுபட்ட ஆசிரியர்கள் உட்பட கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஏற்கனவே கடந்த பெப்ரவரி மாதம் 23ம் திகதி எமது சங்கத்தினால் கல்வியமைச்சுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், பாடசாலைகள் தொடங்குவதற்கு முன்பு அனைத்து கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம்.
அப்போது ஆசிரியர்களுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தபோதிலும் செய்யத் தவறியது. இதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் அதிருப்தியை தெரிவித்துக்கொள்கிறது. சுகாதாரத் துறையுடன் கலந்துரையாடல்களை நடாத்தி விரைவாக தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் மிகப் பொறுப்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், எதிர்காலத்தில் தேசிய அளவில் பரீட்சைகள் நடைபெறவுள்ளது என்பதும், அதற்கு முன் மாணவர்களைப் பாடசாலைக்கு அழைக்க வேண்டும் என்பதும் நீங்கள் அறிந்த விடயமாகும்.இத்தகைய சூழ்நிலையில், தடுப்பூசியின் முதலாவது அளவைக் கொடுத்து , சில மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது அளவை கொடுப்பதும் அதன்படி நோயெதிர்ப்பானது உடலில் சரியாகச் செயற்பட எடுக்கும் காலமாக அமையும் என்பதும் சுகாதாரத் துறையின் கருத்தாக இருப்பதால் இந்தக் காலகட்டத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கூற வேண்டியுள்ளது.
இத்தகைய சூழலில், நாட்டில் 45 லட்சம் மாணவர்கள் மற்றும் 3 லட்சம் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பொதுவாகச் சமூகத்தின் பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டு தடுப்பூசி வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாத கடமையாகும்.
எனவே, மேற்கூறிய விடயங்கள் குறித்துத் அதிக கவனம் செலுத்திக் குறிப்பிடப்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்க சுகாதாரத் துறையுடன் கலந்துரையாடி முறையான திட்டமொன்றினை விரைவாக முன்னெடுக்குமாறு சங்கம் மீண்டும் பொறுப்புடன் கேட்டுக் கொள்வதாக சங்கத்தின் பிரதித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளவர்களின் விபரங்களை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ளது.
21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11 முதல், 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணி வரையில், நாடு முழுவதும் நடமாட்டக்கட்டுப்பாடு அமுலாக்கப்படவுள்ளது.
அரச ஊழியர்களுக்கான மே மாத சம்பளத்தை உரிய தினத்திற்கு முன்னதாகவே வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் கொவிட் 19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 145,202ஆக பதிவாகியுள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுனர்களுக்கு சுற்றறிக்கைக்கு அமைய விடுமுறை வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடவுள்ளதாக ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.