நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாடு அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை தளர்வின்றி நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
All Stories
மேல் மாகாணத்தில் உள்ள சுகாதார ஊழியர்களின் பெற்றோருக்கு செலுத்த 13000 தடுப்பூசிகளை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஷெனால் பெர்ணாண்டோ நேற்று (27) தெரிவித்தார்.
கொவிட் 19 தொற்றினால் வீட்டுப்பணிப்பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தௌிவுபடுத்தும் நிகழ்வொன்று நேற்று முன்தினம் (27) கொழும்பில் நடைபெற்றது.
சீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 5 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகளில் 2ஆம் மாத்திரை தடுப்பூசி ஏற்றத்திற்காக 375,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டத்தடையை எதிர்வரும் 7ம் திகதி தளர்த்துவதா இல்லையா என்பது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என்று இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதுவரை கொவிட் 19 தடுப்பூசி வழங்காத காரணத்தினால் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பித்துள்ள கிராமசேவையார்கள் உட்பட ஏனைய துறைகளை சார்ந்த அதிகாரிகளுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று இன்று (27) நடைபெறவுள்ளது.
கட்டுநாயக்க உட்பட ஏனைய வர்த்தக வலயங்களிலும் வடக்கிலுள்ள ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள், ஏனைய தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்களின் நன்மை குறித்து கவனம் செலுத்துவதில்லை என்று வியர்வைத் துளிகளின் கூட்டமைப்பின் திட்ட பிரதானி சமிலா துஷாரி கவலை வௌியிட்டுள்ளார்.
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட முன்னுரிமைப்பட்டியலுக்கு வௌியே கொவிட் 19 தடுப்பூசி வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஜனாதிபதி விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மருத்துவ ஆய்வுகூட சேவை தொழில் வல்லுநர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆசிரியர்களின் பிள்ளைகளை அவர்கள் பணிபுரியும் பாடசாலையில் சேர்ப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளதாக சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட்-19 தடுப்பூசி, சுகாதார உபகரணங்கள், போக்குவரத்து வசதிகள் என்பனவற்றை தாங்கள் அரசாங்கத்திடம் கோரியநிலையில், அத்தியாவசிய சேவை வர்த்தமானியே கிடைத்துள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வினால் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி இன்று (27) வெளியிடப்பட்டுள்ளது.
புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்னம் இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.