All Stories
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்துக்கு பதவியுயர்த்தல் - (2020.07.01) / (2021.01.01) க்கான பெயர்ப்பட்டியலை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று (21) இரவு 11 மணி முதல் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.
முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்களில் பணியாற்றும் கர்ப்பிணி ஊழியர்களுக்கு வீடுகளில் இருந்து கடமைகளை முன்னெடுக்க அனுமதிக்குமாறு தொழில் ஆணையாளர் நாயகம் பி. கே பிரபாத் சந்திரசிறி இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புசபை தலைவருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியுடன் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விளக்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
2021.01.01 திகதி நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நிலுவை சம்பளம் மற்றும் ஏப்ரல் மாத சம்பளம் கிடைக்காமை தொடர்பில் பல்நோக்கு அபிவிருத்தி பணிக்குழு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
இன்று (21) தொடங்கும் பயண கட்டுப்பாட்டு நடைமுறை காலத்திற்கான அரசாங்கத்தின் புதிய தீர்மானங்கள் தொடர்பான அறிவித்தல், ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளினால் நாடளாவிய ரீதியில் நிரந்தர அரச ஊழியர்களுக்கான இது வரை நடத்தப்பட்டு வந்த (மூடிய) பரீட்சைகள் இல்லாது போகும் நிலை ஏற்பட்டுள்ளதால் அது தொடர்பில இன்று (21) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள துல்ஹிரிய வர்த்தக வலயத்தில் 400 கொவிட் 19 தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆடை உற்பத்தி தொழிற்சாலையொன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் பயிலுநர் வழங்குதல் திட்டம் - 2020 இன் கீழ் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண் பயிலுநர்களுக்கு மகப்பேற்றின் பின்னர் சனி, ஞாயிறு மற்றும் அரச விடுமுறைகள் நாடகள் தவிர்ந்த 84 நாட்கள் விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சபை சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுனர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பான விடயங்கள் குறித்து கல்வி அமைச்சுடன், ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.