வீடுகளில் முதியவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளார்களாயின், அவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு தயங்க வேண்டாம் என, பிரதி சுகாதார சேவைகள் பணிபபாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (25) நள்ளிரவுடன் தமது சேவைகளில் இருந்து விலகிக்கொள்ளப்போவதாக இலங்கை கிராம சேவகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கொவிட் 19 தொற்றுக்குள்ளான சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கான பராமரிப்பு நிலையமொன்றை அமைக்க முதலீட்டு ஊக்குவிப்புச்சபை நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.
இலங்கை தொழில்நுட்பச் சேவையின் ஐ ஆம் வகுப்பு அலுவலர்களை விசேட வகுப்பிற்கு தரமுயர்த்துவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை – 2018(2020) இன் பெறுபேறுகள் வெளிடப்பட்டுள்ளன.
மே மாதத்திற்கான ஓய்வூதியத்தை பெற முடியாது போன தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் ஓய்வூதியக்காரர்கள் அவர்களுடைய பிரதேச தபால் நிலையங்களை தொடர்புகொள்வதன் மூலம் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராமசேவகர்கள் மற்றும் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் அடுத்தக் சுற்றில் கொவிட் 19 வழங்கப்படும் என்றும் எவ்வித தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டும் என்றும உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணிப்பது பாதுகாப்பற்றது. எனவே அந்நாடுகளுக்குப் பயணிக்கவேண்டாம் என்று குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது.
தற்போதைய கொவிட் 19 அச்சுருத்தல் நிலையில் ஏனைய சுகாதார ஊழியர்கள் எதிர்நோக்கும ஆபத்தை கருத்திற்கொள்ளாது தடுப்பூசிகளை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் மற்றும் அவர்களுடைய உறவினர்களுக்கு வழங்க சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானம் குறித்து பொது சுகதார பரிசோதகர்கள் சங்கம் அதிருப்தியை வௌியிட்டுள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி ஏற்றலின்போது மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமையளிக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
15 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகளை, உடனடியாக கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டினுள் அமுலாக்கப்பட்டுள்ள பயணத்தடைகளின் காரணமாக இலங்கை மத்திய வங்கியின் கொழும்பில் அமைந்துள்ள தலைமை அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களுக்கு சமூகமளிக்காது