All Stories
பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தற்போது வெற்றிடமாகவுள்ள பாடசாலை காவலாளிகள் பதவிக்கு விரைவில் ஆட்சேர்ப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு நாட்டில் உள்ள எந்தவொரு தேர்தல் வாக்கெடுப்பு நிலையத்திலிருந்தும் வாக்களிக்க முடியும் என சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவுக்கு 3,000 ரூபாவும் சேர்த்து, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் மொத்தம் 5,500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தல் தொகுதி அடிப்படையில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.
2024ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
தெமட்டகொட ரயில் நிலைய ஊழியர்கள் தமது கடமைகளை புறக்கணித்துள்ளதால் ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்குப் பிறகு கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்காக அரச மற்றும் தனியார் துறைகளில் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதே தமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலின் போது அரச அதிகாரிகள் மற்றும் அரச செயற்பாடுகள் தொடர்பான வழிகாட்டல் கோவையை வெளியிட மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.